ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : மணிவண்ணனுக்கு போலீஸ் காவல்
- மணிவண்ணனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவலில் இருக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
- மணிவண்ணன் என்பவர் ஆர்காடு சுரேஷ்- யின் உறவினர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சென்னை:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சொமோட்டோ உடை அணிந்து வந்து வெட்டிய கும்பலை ஒருங்கிணைத்த மணிவண்ணனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் மணிவண்ணனை தற்போது 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் மணிவண்ணன் என்பவர் ஆர்காடு சுரேஷ்- யின் உறவினர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மணிவண்ணன், "சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோர் சொமேட்டோ ஊழியர்கள் போல உடை அணிய வைத்து நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக கொலை செய்ததில் முக்கிய பங்காற்றியவர்"
மேலும் "கூலிப்படையாக செயல்பட்ட தனது நண்பர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுப்பதாக கூறி அழைத்து வந்து கொலையில் மணிவண்ணன் ஈடுப்படுத்தியுள்ளார்" என்பதும் தெரியவந்துள்ளது.