தமிழ்நாடு
திருத்தணியில் வீடுகளில் குப்பைகளை பிரித்து வழங்க விழிப்புணர்வு
- திருத்தணி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து தினசரி வீடுகள் தேடி வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
- வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
திருத்தணி:
திருத்தணி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து தினசரி வீடுகள் தேடி வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் ராமஜெயம் மேற்பார்வையில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதனை நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் சாமிராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.