மூட்டை மூட்டையாக கொண்டு வரப்பட்ட பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல்
- பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
- இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன
பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், சென்னை வில்லிவாக்கம் அருகே அரியானா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த கண்டெய்னர் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பாஜக கொடிகள், தொப்பிகளை பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதனை அடுத்து லாரியில் இருந்த நபர்களையும் ஓட்டுநரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடசென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்களுக்காகவும் மத்திய சென்னையில் திறக்கப்பட உள்ள அலுவலகத்திற்காக இந்த பொருட்கள் கொண்டுவரப்பட்டது என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.