பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
- மர்மநபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
- கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரிணை.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதை சற்றும் எதிர்பாராத ஆம்ஸ்ட்ராங் நிலைதடுமாறி அங்கேயே கீழே விழுந்தார். இதை பார்த்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மர்ம நபர்கள் தப்பி ஓடியதை அடுத்து துடிதுடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை செல்வதற்குள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும், தப்பி சென்ற கொலையாளிகளை தேடும் பணிகளை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.