தமிழ்நாடு

உக்கடம் வின்சென்ட் சாலையில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பற்றி விசாரித்து அபராதம் விதித்த போலீசார்.

கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி- கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2022-10-28 10:23 GMT   |   Update On 2022-10-28 10:23 GMT
  • உக்கடம், கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கணக்கெடுத்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
  • உக்கடம், வின்சென்ட் ரோடு, கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், கேட்பாரற்றும் நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

கோவை:

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரோந்து சென்றும், வாகன சோதனை நடத்தியும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மாநகர போக்குவரத்து போலீசார் கார் வெடிப்பு நடந்த பகுதியை சுற்றி உள்ள உக்கடம், கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கணக்கெடுத்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் கேட்பாரற்று நின்ற 12 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதில் 7 கார்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாகனங்களை பெற்று கொண்டனர். மற்ற 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இன்று காலை போக்குவரத்து போலீசார் உக்கடம், வின்சென்ட் ரோடு, கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், கேட்பாரற்றும் நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை ஆட்டோவில் ஏற்றி சென்றனர். தொடர்ந்து கோவையில் பிரதான சாலைகளான அவினாசி சாலை, திருச்சி சாலை என முக்கிய சாலைகளிலும் சாலையோரங்களில் நிற்கும் வாகனங்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News