தமிழ்நாடு

முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு சென்னை ஐ.டி. கம்பெனி பெண் ஊழியர் தற்கொலை

Published On 2022-09-17 08:12 GMT   |   Update On 2022-09-17 08:12 GMT
  • தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டே இந்துமதி ஹீலியம் சிலிண்டரை கொண்டு வந்தது தெரியவந்தது.
  • இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடசாமி. விவசாயி. இவரது மகள் இந்துமதி (25), என்ஜினீயரிங் பட்டதாரி.

இவருக்கும் நல்ல கவுண்டம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த என்ஜினீரியங் பட்டதாரி விஷ்ணுசாரதி என்பவருக்கும் கடந்த 100 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பின்னர் விஷ்ணுசாரதியும், இந்துமதியும் சென்னைக்கு சென்று அங்கு ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்துமதியின் பாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து இந்துமதி தனது கணவர் விஷ்ணுசாரதியுடன் பாட்டியை பார்ப்பதற்காக பொலவ காளிபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்தார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்த இந்துமதி தூங்குவதற்காக தனது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இந்துமதியை எழுப்பினர்.

ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து கதவை திறக்க முயன்றபோது உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.

இதையடுத்த கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இந்துமதி கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவர் தனது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு டேப் ஒட்டியுள்ளார். மேலும் பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டரில் இருந்து டியூப் மூலம் வாயிக்குள் காற்றை செலுத்தி மூச்சு திணறல் ஏற்பட்டு கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடப்பது தெரியவந்துது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து கோபி செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு கோபி செட்டிபாளையம் டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டே இந்துமதி ஹீலியம் சிலிண்டரை கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி நேற்றுடன் 100 நாட்கள் ஆன நிலையில் இந்துமதி தற்கொலை செய்துகொண்டதால் இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினியும் இன்று விசாரணை நடத்துகிறார். அதன் அடிப்படையிலேயே அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

திருமணமான 100-வது நாளில் ஐ.டி. கம்பெனி பெண் ஊழியர் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News