தமிழ்நாடு

சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-08-23 12:28 GMT   |   Update On 2024-08-23 12:28 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
  • விழாவில் 159 மத்திய அரசு பதக்கங்களும் 301 முதலமைச்சர் பதக்கங்களும் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர், சென்னை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இங்கு, காவல்துறையினர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, காவல்துறையினருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பதக்கங்களை வழங்கி கவுரவித்து வருகிறார்.

அதன்படி, காவல், ஊழல் தடுப்பு, தீயணைப்பு, சிறை, சீர்திருத்த பணி, ஊர்க்காவல், தடய அறிவியல் துறையினருக்கு பதங்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

விழாவில் 159 மத்திய அரசு பதக்கங்களும் 301 முதலமைச்சர் பதக்கங்களும் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.

சோமரசம்பேட்டை காவல் நிலைய காவலர் பி.செந்தில் குமாருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News