தமிழ்நாடு

தண்டோரா

தண்டோரா போட்டு அறிவிப்பு வெளியிட தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

Published On 2022-08-03 15:33 GMT   |   Update On 2022-08-03 15:33 GMT
  • தண்டோரா போடுவது இன்னும் தொடரவேண்டியது தேவையில்லை என தலைமை செயலாளர் கடிதம்
  • தடையை மீறி தண்டோரா போடும் பணியில் ஆட்களை ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போது மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக கொண்டு சேர்ப்பதற்கு இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருக்கிறது. அதனை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதை கண்டேன்.

தற்போது அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழிநுட்பமும் பெருகிவிட்டது. இந்த சூழ்நிலையில் தண்டோரா போடுவது இன்னும் தொடரவேண்டியது தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி அறிவிப்பு வெளியடலாம். இதன் மூலம் செய்திகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே தண்டோரா போடுவதற்கு கடுமையான தடை விதிப்பது நல்லது. தடையை மீறி தண்டோரா போடும் பணியில் ஆட்களை ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை சென்றடையும் வகையில் பரவலான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News