தமிழ்நாடு

சென்னையில் கிறிஸ்துமஸ் 'ஸ்டார்' அலங்கார பொருட்கள் விற்பனை தீவிரம்

Published On 2022-12-17 10:00 GMT   |   Update On 2022-12-17 10:00 GMT
  • சென்னையில் ‘ஸ்டார்’, அலங்கார தோரணங்கள், பரிசுப் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
  • ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை:

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னையில் ஸ்டார், அலங்கார பொருட்கள் விற்பனை தீவிரம் அடைந்து உள்ளது.

கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் 'ஸ்டார்', அலங்கார தோரணங்கள், பரிசுப் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னையில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில் அலங்காரங்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்னை விழாக்கோலம் பூண்டு களை கட்டி உள்ளது.

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்டப்பட்டு உள்ளன. வருகிற 2023-புத்தாண்டு பிறக்கும் வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசலிலும் 'ஸ்டார்கள்' அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளில் வண்ண அலங்கார தோரணங்கள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அழகிய சீரியல் விளக்குகள் பொருத்தி அழகுபடுத்தி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி நண்பர்கள், உறவினர்கள், சிறுவர்- சிறுமிகளுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்.

சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி பீனிக்ஸ் மால், 'ஸ்பென்சர்' பிளாசா, 'எக்ஸ்பிரஸ் அவென்யூ' போரம் மால், "ஸ்கைவாக்" உள்ளிட்ட ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News