நிதி வளம் பெருக்க ஆலோசனை தாருங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- புதிய புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைகளை திட்டக்குழு வழங்க வேண்டும்.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் மாநில திட்டக்குழு தயாரித்த வரைவு கொள்கைகள், அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கடந்த மார்ச்சில் துறை சார்ந்த 16 அறிக்கைகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் என்னிடம் வழங்கினார்.
* பொருளாதார சமூக நீதி அளவில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம்.
* மாநில திட்டக்குழுவின் அறிக்கைதான் திமுக ஆட்சியின் மார்க் ஷீட்.
* காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
* அரசின் திட்டங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு மனிதரையும் உயர்த்தி உள்ளது.
* தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும் மக்களை சென்றடைந்து வருகின்றன.
* காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
* விடியல் பயணம் மூலம் பெண்கள் முன்னேற்றம், புதுமைப்பெண் திட்டம் மூலம் பெண்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
* மக்களை நேரில் சந்தித்து தகவல் பெற்றாலும் புள்ளி விவரங்கள் மூலம் திட்டக்குழுவினர் வழங்குகின்றனர்.
* கவனம் பெறாத துறைகளையும் சரிபார்த்து திட்டங்களை தயாரித்து தருமாறு மாநில திட்டக்குழுவினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
* ஆலோசனையுடன் நிறுத்திக்கொள்ளாமல் திட்டங்கள் செயல்படுவது குறித்தும் ஆய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
* புதிய புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைகளை திட்டக்குழு வழங்க வேண்டும்.
* ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் இருக்க கூடாது என்பதன் அடிப்படையில் திட்டங்கள் வகுக்க வேண்டும்.
* பசியில்லை, வறுமையில்லை, பள்ளிகள், குடிநீர் இல்லாத இடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க உள்ளோம்.
* சாலை, மின்சாரம், பள்ளிகள் இல்லாத இடங்கள் இல்லை என்ற தன்னிறைவு பெற்றதாக தமிழகத்தை உருவாக்கினோம்.
* நிதிவளம் இருக்குமானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் நிதிவளம் பெருக்க ஆலோசனை தாருங்கள் என்று கூறினார்.