தமிழ்நாடு
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ரூ.29 லட்சம் உண்டியல் வசூல்
- உண்டியல் பணம் எண்ணும் பணியையொட்டி பக்தர் கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
- போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்பட்டது.
இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் பாஸ்கர் முன்னிலையில், திருப்போரூர் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன், திருப்போரூர் கோவில் மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பக்தர்கள் ஏராளமனோர் இதில் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கமாக ரூ.28 லட்சத்து 80 ஆயிரத்து 639-ம், 288 கிராம் தங்கமும், 2,305 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் பணம் எண்ணும் பணியையொட்டி பக்தர் கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.