தமிழ்நாடு

வெஜ் ரோலில் ஆணி இருந்ததாக புகார்- சேலத்தில் பேக்கரி உரிமையாளருக்கு நோட்டீஸ்

Published On 2023-03-02 04:57 GMT   |   Update On 2023-03-02 04:57 GMT
  • விற்பனைக்கு வைத்திருந்த 3 சிக்கன் ரோல் 150 கிராம், பால்கோவா 5 மற்றும் 2 கிலோ லேபிள் இல்லாத சிப்ஸ் காரசேவு உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
  • உணவு மாதிரி பரிசோதனை முடிவின் அடிப்படையில் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம்:

சேலம் நெத்தி மேட்டில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே தனியார் பேக்கரி ஒன்று உள்ளது . அங்கு நேற்று முன்தினம் வாடிக்கையாளர் தீபக் சரவணன் ஒரு வெஜ் ரோல் வாங்கினார் .

அதில் துருப்பிடித்த ஆணி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதேபோல சில நாளுக்கு முன் ஒரு வாடிக்கையாளர் சுரேஷ் என்பவர் பால்கோவா வாங்கினார். அதில் பூஞ்சான் பிடித்து கெட்டு போய் துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்தது.

இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆரோக்கிய பிரபு, சுருளி ஆகியோர் அந்த பேக்கரியில் ஆய்வு செய்தனர். உணவு மாதிரி எடுத்து உடையாபட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வுக் ஆய்வகத்திற்கு அனுப்பினார் .

விற்பனைக்கு வைத்திருந்த 3 சிக்கன் ரோல் 150 கிராம், பால்கோவா 5 மற்றும் 2 கிலோ லேபிள் இல்லாத சிப்ஸ் காரசேவு உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடைக்காரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இது குறித்து உணவுத்துறை அலுவலர்கள் கூறுகையில் உணவு மாதிரி பரிசோதனை முடிவின் அடிப்படையில் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பால்கோவா வாங்கியதை பிரித்து விட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். இதனால் புகார்தாரர் அதை வாங்கியது? எப்போது சாப்பிட எடுத்தது எப்போது? என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News