தமிழ்நாடு

கள்ளச்சாராய உயிரிழப்பு: சென்னையில் ஒருவர் கைது

Published On 2024-06-23 02:33 GMT   |   Update On 2024-06-23 04:32 GMT
  • பலியான விவகாரம் தொடர்பாக நேற்று 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
  • உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் பலியான விவகாரம் தொடர்பாக நேற்று 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் அருந்தி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளச்சாராயம் வழக்கில் சென்னையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமாரை இன்று காலை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்த சிவகுமாரை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News