தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்கும்- தமிழக அரசு

Published On 2024-06-18 08:29 GMT   |   Update On 2024-06-18 08:29 GMT
  • மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
  • ரேஷன் பொருட்கள் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

சென்னை:

ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படாத நிலையில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் இன்னும் வந்து சேரவில்லை என்று புகார் எழுந்தது.

இதையடுத்து ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில்,

பாராளுமன்ற தேர்தலையொட்டி டெண்டர் போடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே துவரம் பருப்பு, பாமாயிலை பெற்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மே மாதம் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் மற்றும் இந்த மாதம் பெற வேண்டியதையும் சேர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.

மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்கள் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News