தமிழ்நாடு
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு- விசாரணைக்காக நாளை ஈபிஎஸ் ஆஜர்
- தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என ஈபிஎஸ் குற்றச்சாட்டு.
- ஈபிஎஸ்-ன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக உள்ள தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீத நிதியை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன் எம்.பி., எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஈபிஎஸ்-க்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்காக வருகிறது.
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்காக ஆஜராகிறார்.