ஜாபர் சாதிக் வழக்கு- நேரில் ஆஜராக இயக்குனர் அமீருக்கு சம்மன்
- மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன்.
- ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை, அமீர் இயக்கி இருந்தார்.
டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகியது.
இந்நிலையில், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர் ஆஜராக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
அதில், வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக், அவரது கூட்டாளி சதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை, அமீர் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.