தமிழ்நாடு

கவர்னரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

Published On 2023-01-14 16:13 GMT   |   Update On 2023-01-14 16:13 GMT
  • கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை செயலாளர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
  • சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.

சென்னை:

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவர் மீது கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை செயலாளர் எஸ்.பிரன்னா ராமசாமி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடரும்படி தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.

இந்நிலையில், திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டிருப்பதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.

Tags:    

Similar News