பா.ஜ.க. ஒரு மூழ்கும் கப்பல்- அமலாக்கத்துறை அதன் இளைஞர் அணி: கே.பாலகிருஷ்ணன் கடும் விமர்சனம்
- ஒரு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் திடீரென சோதனை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது.
- பழைய வழக்கில் பா.ஜ.க. ஆதாயம் தேடுவதை எதிர்க்கிறோம்.
சென்னை:
அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமலாக்கத்துறை பா.ஜ.க.வின் இளைஞர் அணி போல செயல்படுகிறது.
ஒரு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் திடீரென சோதனை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது. இந்த சோதனைகள் பா.ஜ.க. மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்தும்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற சோதனைகள் நடைபெறுகின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையில் சோதனை நடைபெறுகின்றன.
பா.ஜ.க. ஒரு மூழ்கும் கப்பல், அதை எது செய்தாலும் சரி என்று செய்ய முடியாது.
மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை? அதன் மீது ஏன் நடவடிக்கைகள் இல்லை.
பழைய வழக்கில் பா.ஜ.க. ஆதாயம் தேடுவதை எதிர்க்கிறோம்.
தமிழகத்தில் பா.ஜ.க. நுழைய முடியாது, தி.மு.க.வை உடைக்க முடியாது, அதனால்தான் அமைச்சர்களை குறி வைக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.