இந்தியன் 2-ல் ஒவ்வொரு உரையாடலும் தத்துவம் போல உள்ளது- சீமான்
- இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
- நமக்கு எதற்கு பிரச்சனை, நமக்கு எதற்கு வம்பு என்று கடந்து செல்பவர்களால்தான் நாட்டுக்கே பிரச்சனை.
சென்னை ராயப்பேட்டையில், நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போத அவர் பேசியதாவது:-
பொதுவாக நாம் திரைக் கலையை ஒரு பொழுதுபோக்காக தான் நினைக்கிறோம். சினிமா பொழுதை போக்குவதற்கு அல்ல. நல்ல பொழுதாக ஆக்குவதற்கு போன்ற நல்ல படைப்புகளும் இருக்கிறது.
திரைக்கலை என்பது அறிவியலின் ஒரு அழகான குழந்தை. ஒவ்வொரு தேசினத்தின் அழகான கலை முகம். குறிப்பாக இந்தியன் 2 திரைப்படம் ஒரு திரைக்கதை அமைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூற முடியாது.
அன்றாட நிகழ்வுகளில் நாம் சந்திக்கின்ற, எதிர்கொள்கிற அவலங்கள் இந்த படத்தில் மிக ஆழமாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நமக்கு எதற்கு பிரச்சனை, நமக்கு எதற்கு வம்பு என்று கடந்து செல்பவர்களால்தான் நாட்டுக்கே பிரச்சனை.
திரைப்படத்தில் ஒவ்வொரு உரையாடலும் ஒவ்வொரு தத்துவம் போல உள்ளது.
கமல்ஹாசன் உடல்தோற்றங்களை மாற்றி நடித்திருக்கிற விதம், அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கின்றனர்.
நீ உன் வீட்டை சரி செய்.. நாடு சரியாகும் என்பேதே இந்தியன் 2 சொல்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.