தமிழ்நாடு

ரூ.1.5 கோடி பணம் கொள்ளை போனதாக பொய் புகார்- பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

Published On 2024-05-20 10:42 GMT   |   Update On 2024-05-20 10:42 GMT
  • தனது வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்க பணம் திருடு போனதாக பாஜக பிரமுகர் விஜயகுமார் புகார் அளித்தார்.
  • இந்த கொள்ளை வழக்கில் அன்பரசன் என்பவரை காவல்துறை கைது செய்தது.

நேற்று முன்தினம் பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் இருந்த ரூ.1.5 கோடி ரொக்க பணம், 9 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கோவை அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த கொள்ளை வழக்கில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விஜயகுமார் வீட்டில் இருந்த ரூ.18.5 லட்சம் ரொக்க பணம், 9 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆனால் விஜயகுமார் தனது வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்க பணம் திருடு போனதாக தெரிவித்தால் அவரிடம் மீண்டும் காவல்துறை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், கொள்ளை தொடர்பாக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் தொகையை குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அன்பரசன் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பொய்யான புகாரை கூறி போலீசாரை அலைக்கழித்தாக பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது நீதிமன்ற உத்தரவுப்படி 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News