தமிழ்நாடு

கடலில் தவறி விழுந்த மீனவரை தேடி கண்டு பிடித்த தீயணைப்பு வீரர்கள்

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி

Published On 2023-02-15 05:15 GMT   |   Update On 2023-02-15 05:15 GMT
  • இரவிபுத்தன் துறையை சேர்ந்த சூசைராஜ் என்பவர் படகில் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு தேங்காப்பட்டணம் வந்தனர்.
  • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவரின் உடலை தேடினர்.

கிள்ளியூர்:

தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும் கேரள மாநிலத்தை சேர்ந்த மீனவர்களும் வந்து படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.

நேற்று இரவிபுத்தன் துறையை சேர்ந்த சூசைராஜ் என்பவர் படகில் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு தேங்காப்பட்டணம் வந்தனர். அந்த படகில் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த ஜேக்கப் (வயது 45) என்ற மீனவரும் இருந்தார்.

நேற்று மாலையில் துறைமுக படகு அணையும் தளத்தில் படகை நிறுத்திவிட்டு வெளியில் வந்துள்ளனர். இந்நிலையில் படகின் ஓரத்தில் நின்றபோது ஜேக்கப் தவறி கடலில் விழுந்துள்ளார்.

ஜேக்கப்பின் அலறல் சத்தத்தை கேட்டு சக மீனவர்கள் ஓடி வந்து தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து புதுக்கடை போலீசுக்கும் குழித்துறை தீயைணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவரின் உடலை தேடினர். ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர் அவருடைய உடல் கிடைத்தது. பின்னர் அவருடைய உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News