தமிழ்நாடு

யமுனா நகரில் வீடுகள் முன்பு தேங்கி உள்ள மழை நீர்

வீடுகளை சூழ்ந்த மழைவெள்ளம் இன்னும் வடியவில்லை: மழை நின்றும் பொதுமக்கள் தவிப்பு

Published On 2022-12-15 13:13 GMT   |   Update On 2022-12-15 13:13 GMT
  • மழைநீர் வடிகால் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் மழை வெள்ளம் வீடுகளை சுற்றி தேங்கி உள்ளது.
  • நசரத்பேட்டை யமுனா நகரில் வீடுகள் முன்பு தேங்கி உள்ள மழை நீரை கடந்து செல்ல சிலர் படகு போன்று மிதவையை தயார் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

பூந்தமல்லி:

மாண்டஸ் புயல் மற்றும் அதனை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. தற்போது மழை ஓய்ந்து உள்ளது. கனமழையின் போது தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் முழுவதும் வடிய தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் தற்போது மழை நின்றும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது.

காட்டுப்பாக்கம் அம்மன் நகர், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை யமுனா நகர், பாரிவாக்கம் மாருதி நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் வெளியேறாமல் தேங்கிஉள்ளது. பல நாட்களாக தேங்கி நிற்கும் இந்த தண்ணீர் தற்போது நிறம் மாறி துர்நாற்றம் அடிக்க அடிக்க தொடங்கி உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் அத்தியாவசிய தேவைக்கு இந்த தண்ணீரிலேயே வெளியே நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,

இப்பகுதியில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் மழை வெள்ளம் வீடுகளை சுற்றி தேங்கி உள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தேங்கியிருக்கும் மழை வெள்ளத்தை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

காட்டுப்பாக்கம், பாரிவாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் மீண்டும் நீர் சுரப்பதால் நீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

நசரத்பேட்டை யமுனா நகரில் வீடுகள் முன்பு தேங்கி உள்ள மழை நீரை கடந்து செல்ல சிலர் படகு போன்று மிதவையை தாயார் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News