தமிழ்நாடு

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று யோகாசனம் செய்த காட்சி.

யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்- கவர்னர் ஆர்.என்.ரவி

Published On 2024-06-21 04:06 GMT   |   Update On 2024-06-21 04:06 GMT
  • இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • கடந்த ஆண்டு இதே நாளில் 24 கோடி பேர் யோகாவை செய்துள்ளனர்.

வடவள்ளி:

உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் நடந்தது.

இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர் அவர் பல்வேறு ஆசனங்களையும் செய்தார். அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து ஆசனங்களை செய்தனர்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகா தினமான இன்று அனைவருக்கும் எனது யோகா தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். யோகா என்பது ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு யோகாவை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி கிடைக்க செய்தார். உலக நாடுகள் அனைத்தும் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே அனைவரும் யோகாவை கற்றுக்கொள்ளுங்கள்.

கடந்த ஆண்டு இதே நாளில் 24 கோடி பேர் யோகாவை செய்துள்ளனர்.

மனதிற்கும், உடலுக்கும் நன்மை அளிக்கும் யோகாவை அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News