தமிழ்நாடு

முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தை பாராட்டிய பியூஷ் கோயல்

Published On 2024-01-07 06:08 GMT   |   Update On 2024-01-07 06:08 GMT
  • தமிழ் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது
  • சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தீல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. இது நாளை நிறைவடையும்.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாநாட்டில் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். 

நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.

"வணக்கம்" என தமிழில் தொடங்கி தனது உரையில் அவர் தெரிவித்ததாவது:

10 ஆண்டுகளுக்கு முன் நலிவடைந்த பொருளாதாரத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்தியாவின் 100-வது சுதந்திர தின விழாவில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா திகழும். காஞ்சி பட்டு போல் பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு நிர்ணயித்து பயணிக்கும் தமிழகத்திற்கு வாழ்த்து. ஆதித்யா-எல்1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர். நாடு வலிமையடைய அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ந்த நாடாக நமது நாட்டை மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியாவை உருவாக்கவும், பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தவும் நாம் செயல்படுவோம்.

இவ்வாறு அமைச்சர் பியூஷ் கூறினார்.

Tags:    

Similar News