தமிழ்நாடு
null

20 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 111 டிகிரி வெப்பம் பதிவானது

Published On 2024-05-01 13:40 GMT   |   Update On 2024-05-01 13:41 GMT
  • இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது
  • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது

தமிழகம் முழுவதும் இன்று 20 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-

வேலூர் - 111, ஈரோடு - 110, திருச்சி - 109, திருத்தணி - 108, தருமபுரி - 107, சேலம் - 107, மதுரை நகரம் - 106, திருப்பத்தூர் - 106, நாமக்கல் - 106, தஞ்சாவூர் - 106, மீனம்பாக்கம் - 105, கடலூர் - 104, பாளையங்கோட்டை - 104, கோவை - 104, நுங்கம்பாக்கம் - 102, நாகப்பட்டினம் - 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News