தமிழ்நாடு

வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு- அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு

Published On 2024-09-13 14:39 GMT   |   Update On 2024-09-13 14:39 GMT
  • வழக்கில் சிலர் விடுவிக்கப்பட்டும், வழக்கு ரத்து செய்யப்பட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு 2008-ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுர அடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, ராஜமாணிக்கம், துர்கா, சங்கர் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2013-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சிலர் விடுவிக்கப்பட்டும், வழக்கு ரத்து செய்யப்பட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News