தமிழ்நாடு

சென்னையில் மழை வெள்ளம் தேங்கும் இடங்கள் 37 ஆக குறைந்தது: கடந்த ஆண்டு 354 பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது

Published On 2023-11-23 07:18 GMT   |   Update On 2023-11-23 07:18 GMT
  • 2002 பருவமழையின் போது 753 பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
  • சுரங்கப்பாதைகளில் மழைநீர் உடனே வடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் பருவமழை தொடர்ந்து பெய்து வந்த போதிலும் சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்குவது இல்லை. கடந்த காலங்களில் பருவமழையின் போது பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னையில் இனி மழைநீர் தேங்காமல் சீராக செல்ல மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி 2 வருடமாக நடந்து முடிந்து உள்ளது. புதிதாக விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநகராட்சியின் நடவடிக்கையால் சென்னையில் இந்த பருவமழைக்கு வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரையில் பெய்த மழையால் 54 இடங்களில் மழைநீர் தேங்குவது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த இடங்களிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

அதனால் மழைநீர் தேங்கும் என்று எதிர்பார்த்த 54 இடங்களில் 37 பகுதிகளில் மட்டுமே தேங்கியது என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

2002, பருவமழையின் போது 753 பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதுவே 2022-ல் 354 ஆக குறைந்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துவிட்டன. இதனால் சாலை கள், தெருக்களில் தேங்கி நிற்க கூடிய மழைநீர் தற்போது உடனே வடிந்து விடுகிறது. மிக கனமழை பெய்தால் கூட அடுத்த சில மணி நேரங்களில் மழைநீர் வடிந்துவிடும்.

இந்த ஆண்டு 54 பகுதிகளில் வெள்ளம் தேங்கும் என்று கண்டறியப்பட்ட நிலையில் அதற்கும் குறைவாக 37 இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. அதனையும் விரைவில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மழைநீர் தேங்கும் பகுதிகளில் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. சுரங்கப்பாதைகளில் மழை உடனே வடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News