தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் பெண் வேடமிட்டு பைக் சாகசம் செய்த வாலிபர்- பிடிக்க போலீஸ் தீவிரம்

Published On 2024-10-18 10:15 GMT   |   Update On 2024-10-18 10:15 GMT
  • கல்லூரி மாணவிகள் வியப்பாக பார்பது போன்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
  • மாணவிகளுக்கு இடையூறினை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூர்:

வேலூரில் வாலிபர் ஒருவர் ரீல்ஸ் மூலம் லைக் பெறுவதற்காக பெண் வேடமிட்டு விலை உயர்ந்த சொகுசு பைக்கில் வேலூர் நகரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பெண் போல அலங்காரம் செய்து மற்றும் தலையில் பூ வைத்து சேலை உடுத்தி, அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிகள் அமைந்திருக்கும் பகுதிகள், பழைய பஸ் நிலையம், முக்கிய வீதிகளில் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் செல்கிறார். மேலும் அவர் கல்லூரி முடிந்து செல்லும் பெண்கள் முன்னிலையில் வேகமாக செல்வது போன்றும், அதை அந்த கல்லூரி மாணவிகள் வியப்பாக பார்பது போன்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பெண்கள் அருகில் சென்று மோதுவது போன்று வேகமாக செல்வதும், பைக்கை முறுக்கி டயர் புழுதி பறக்க செல்வது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இது மாணவிகளுக்கு இடையூறினை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை தேவை என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாகாயம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறாக பைக் சாகசம் மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் வாலிபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News