தமிழ்நாடு
உலக முதியோர் தின விழாவில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி: முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வழங்குகிறார்
- நெற்குன்றம் 145-வது வார்டில் உள்ள ஆண் முதியோர்கள், பெண் முதியோர்கள் 1000 பேரை உலக முதியோர் தினத்தில் கவுரப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது.
- அ.தி.மு.க. செயலாளர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவுகளை வழங்குகிறார்.
அம்பத்தூர்:
பெருநகர சென்னை மாநகராட்சியின் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணை தலைவரும், வளசரவாக்கம் மண்டலம் 145-வது வார்டு கவுன்சிலரும், சமூக சேவகரும், அம்மா அறக்கட்டளை நிர்வாகியுமான டி.சத்தியநாதன் ஏற்பாட்டில் நெற்குன்றம் நேதாஜி நகரில் உலக முதியோர் தின விழாவை முன்னிட்டு நெற்குன்றம் 145-வது வார்டில் உள்ள ஆண் முதியோர்கள், பெண் முதியோர்கள் 1000 பேரை உலக முதியோர் தினத்தில் கவுரப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. விழாவில் முதியோருக்கு அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
நாளை மாலை 6 மணிக்கு நெற்குன்றம் நேதாஜி நகரில் நடைபெறும் விழாவில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பா.பெஞ்சமின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவுகளை வழங்குகிறார்.