தமிழ்நாடு

அ.தி.மு.க.வை வழி நடத்த இப்போது யாருமில்லை- ஜெ.தீபா பேட்டி

Published On 2022-12-06 04:09 GMT   |   Update On 2022-12-06 04:09 GMT
  • அ.தி.மு.க.வுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
  • அ.தி.மு.க. கட்சியாக அல்ல, ஒரு அமைப்பாக கூட இல்லை.

சென்னை:

ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் பிளவு என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, நல்ல தலைமை அ.தி.மு.க.வில் இல்லை என்பதால் இந்த பிளவு இருக்கிறது. சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போது அ.தி.மு.க. கட்சியாக அல்ல, ஒரு அமைப்பாக கூட இல்லை என்றுதான் சொல்வேன். அ.தி.மு.க.வை வழிநடத்த இப்போது யாருமில்லை.

எனக்கு ஒட்டுமொத்த அரசியலே பிடிக்கவில்லை. எனவே நான் அரசியலில் இருந்து விலகிவிட்டேன். ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் சசிகலா மீதுதான் முதல் குற்றம் கூறப்பட்டிருக்கிறது. எனவே அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News