தமிழ்நாடு

நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு- ஜெயக்குமார்

Published On 2024-07-03 07:57 GMT   |   Update On 2024-07-03 07:57 GMT
  • அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
  • நீட் குறித்து விஜய் கருத்தை வரவேற்கிறோம்.

சென்னை:

நீட் தேர்வு முறைகேடால் நீட் மீது உள்ள நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய் விட்டது. நாடு முழுக்க நீட் தேர்வே தேவையில்லை என்பதுதான் அந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்ட விஷயங்கள்.

நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரமாகவே இதை தீர்க்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

இந்நிலையில் நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. விஜயின் கருத்தை வரவேற்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News