தமிழ்நாடு (Tamil Nadu)

ஜெயங்கொண்டம் அருகே போலி டாக்டர்கள் 3 பேர் கைது

Published On 2024-05-30 03:49 GMT   |   Update On 2024-05-30 03:49 GMT
  • போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் சிலர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதுக்குறித்து மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை அலுவலர் மாரிமுத்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் விசாரணை செய்து வந்தார்.

அப்போது சின்ன வளையம் கிராமம் தோப்புத் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பத்மநாபன் (58), அதே பகுதி கீழத்தெருவைச் சேர்ந்த மெய்யப்பன் மகன் பாண்டியன் (61), பெரிய வளையம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த மகாமணி மகன் தமிழ்ச்செல்வன் (39) ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளில் மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது.

பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News