கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உயிரிழப்பு: குஷ்பூ தலைமையில் விசாரணை குழு அமைத்த மகளிர் ஆணையம்
- கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
- கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.
இதற்காக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.