தமிழ்நாடு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கமுதி பள்ளி மாணவி 500-க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை
- வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
கமுதி:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி காவிய ஜனனி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கமுதி தாலுகா பேரையூரை சேர்ந்த தர்மராஜ்-வசந்தி தம்பதியின் மகளான மாணவி காவிய ஜனனிக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.