கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க கனிமொழி எம்பி கோரிக்கை
- கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை கட்சியின் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.