தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்- கருக்கா வினோத்திற்கு நவம்பர் 15ம் தேதி வரை காவல்

Published On 2023-11-01 13:50 GMT   |   Update On 2023-11-01 13:50 GMT
  • கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
  • நீதிமன்ற காவலை தொடர்ந்து கருக்கா வினோத்தை மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.

தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்ற அமர்வு முன்பு வந்தது.

இதில், கருக்கா வினோத்திற்கு நவம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற ஒன்பதாவது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற காவலை தொடர்ந்து கருக்கா வினோத்தை மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags:    

Similar News