தமிழ்நாடு (Tamil Nadu)

சி.பி.சி.ஐ.டி. சோதனை நடைபெற்று வரும் மனோகரனின் வீடு. 

போலி பத்திரம் தயாரித்து நிலமோசடி: அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றிய தலைவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை

Published On 2023-09-01 08:51 GMT   |   Update On 2023-09-01 08:51 GMT
  • ஞானம்மாள் திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார்.
  • சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் ஞானம்மாள் தரப்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 59). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக உள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டு மன்னார்குடி சேர்ந்த ஞானம்மாள் என்ற பெண்ணுக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இது குறித்து ஞானம்மாள் திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் ஞானம்மாள் தரப்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றியும், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மனோகரன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பரசன் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருவது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News