தமிழ்நாடு

கொங்கர்பாளையம் தோட்டப்பகுதியில் ஆடு, மாடு, கன்றுக்குட்டியை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது

Published On 2023-08-06 11:12 GMT   |   Update On 2023-08-06 11:12 GMT
  • ராமசாமி என்பவரது தோட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
  • சிறுத்தையை பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊரா ட்சி பகுதிகளில் ஆடு, மாடு என கால்நடைகளை வேட் டையாடி வந்த சிறுத்தை ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட கன்று குட்டியை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கடித்துக் கொண்றது.

அதற்கு முன்பாக அதே பகுதியில் நஞ்சப்பன் என்கிற முருகேசன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை கடித்து கொன்றது. அதைத்தொ டர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் அந்த சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிறுத்தை வனத்துறையினர் வைந்திருந்த கூண்டில் சிக்கியது.

இதைத்தொடர்ந்து சிறுத்தையை பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. கூண்டில் பிடிபட்ட சிறுத்தை 4 வயதான பெண் சிறுத்தை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News