தமிழ்நாடு

ராணுவ வீரர்கள் தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2023-11-23 07:15 GMT   |   Update On 2023-11-23 07:15 GMT
  • 22 பணியிடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள் தேர்வாகியுள்ளனர்
  • விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

மதுரை:

நெல்லை மாவட்டதை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2018-ம் ஆண்டில் ராணுவ வீரர்கள் தேர்வில் பங்கேற்றோம். உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றோம். இந்த தேர்வின் முடிவில் ராணுவ வீரர்கள் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியலில் எங்கள் பெயர் இடம் பெறவில்லை.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 22 பணியிடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள் தேர்வாகியுள்ளனர் என்றார். ஆனால் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பாணையில் இந்த பதவிக்கு எத்தனை பேர் தேவை, எத்தனை பேரை தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இது சட்ட விரோதமானதாகும். எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு, விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கில் மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர், முதன்மை ராணுவ அதிகாரி உள்ளிட்டோர் ஏற்கனவே தங்களது தரப்பு பதிலை ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை ஏற்புடையதல்ல. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

Tags:    

Similar News