கவரப்பேட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் காந்தி வழங்கினார்
- மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட 642 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கவரப்பேட்டையில் நடைபெற்றது.
- கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பெரியபாளையம்:
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட கும்மிடிபூண்டி ஒன்றியத்தில் உள்ள கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, கும்மிடிப்பூண்டி, புதுகும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், ஈகுவார்பாளையம், மாநெல்லூர், நேமளூர் உள்ளிட்ட 9 கிராமங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட 642 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கவரப்பேட்டையில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.வி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதில் டி.ஜே.ஜி. தமிழரசன், கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், நிர்வாகிகள் நெல்வாய் மூர்த்தி, கவரப்பேட்டை திருமலை, ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதி, புலியூர் புருஷோத்தமன், திருஞானம், பிரசாத், இஸ்மாயில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் ப்ரீத்தி, வருவாய் ஆய்வாளர் பொன்னி, கிராம நிர்வாக அதிகாரிகள் ஜோதிபிரகாசம், திவ்யா, அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.