மண்ணிவாக்கம் பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
- மண்ணிவாக்கம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
- எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை, பல்லாவரம் கருணாநிதி, வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி:
மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ. 76.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கூட்டமைப்பு கட்டிடம், மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.69 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.
வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் துணைத்தலைவர் ஆராமுதன், ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்ணிவாக்கம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு அரசு கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை, பல்லாவரம் கருணாநிதி, வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.