தமிழ்நாடு

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாறும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-01-31 14:15 GMT   |   Update On 2024-01-31 14:20 GMT
  • 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெற்றன.
  • நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெற்றன.

இன்றுடன் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக அணி 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் பதக்கங்கள் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிரா அணி பிடித்தது.

இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு அமைய அனைத்து தகுதியும் உள்ளது.

பதக்க பட்டியலில் தமிழ்நாடு இந்த முறைதான் முதல் 3 இடத்திற்குள் வந்துள்ளது. இதற்கு திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் கிராமபுற ஏழை, எளிய மாணவர்களை கண்டறிய வாய்ப்பாக அமைந்தது.

சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாறும். விளையாட்டு என்பதை இயக்கமாக தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது.

அனைவரும் விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.

பங்கு கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகள்.

கிராமங்களில் இருந்தும் வீரர்கள் வரவேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News