தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாளில் 2½ அடி உயர்வு

Published On 2024-07-31 05:03 GMT   |   Update On 2024-07-31 05:03 GMT
  • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1311 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
  • வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

கூடலூர்:

கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழைபெய்து வருகிறது. மேலும் சாலைகளில் பாறைகள் உருண்டும், நிலச்சரிவு ஏற்பட்டும் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.

நேற்று அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 128.90 அடியாக இருந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 130.45 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 2½ அடி உயர்ந்து ள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நீர்வரத்து 3216 கன அடியில் இருந்து 5339 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1311 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4802 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.

வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.38 அடியாக உள்ளது. அணைக்கு 1913 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2780 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு அணை 33.8, தேக்கடி 22.4, சண்முகாநதி 2.4, போடி 0.4, உத்தமபாளையம் 2.2, கூடலூர் 4.6, வீரபாண்டி 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News