தமிழ்நாடு

பாஜகவில் பிரச்சனை இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2024-09-19 09:19 GMT   |   Update On 2024-09-19 09:19 GMT
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 3 மாதம் படிக்க சென்றுள்ளார்.
  • உறுப்பினர் சேர்க்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

தமிழக பாஜக தலைமை இன்றி தடுமாறுவதாக கூறப்பட்ட நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

* பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 3 மாதம் படிக்க சென்றுள்ளார். கட்சியில் ஒரு பிரச்சனையும் இல்லை.

* அண்ணாமலை வரும் வரை பெரிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம். உறுப்பினர் சேர்க்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

* அண்ணாமலை வந்த பின்னர் பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News