தமிழ்நாடு

முத்தமிழ் முருகன் மாநாடு: மத விழாக்களை அரசு தவிர்க்க வேண்டும் - சிபிஎம் கோரிக்கை

Published On 2024-08-25 01:22 GMT   |   Update On 2024-08-25 01:22 GMT
  • இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக துடிக்கிறது.
  • கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதே ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நோக்கம்.

தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு நடத்திய முத்தமிழ் முருகன் மாநாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை. எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது; மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக துடிக்கிறது. கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நோக்கம். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News