தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தையும், சுங்கச்சாவடியில் வாக்குவாதம் செய்ததையும் படத்தில் காணலாம்.

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் ஊழியர்களுடன் நாம்தமிழர் கட்சியினர் வாக்குவாதம்

Published On 2023-05-18 06:07 GMT   |   Update On 2023-05-18 06:07 GMT
  • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
  • கொடைரோடு சுங்கச்சாவடியில் வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

கொடைரோடு:

தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சீமான் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரு தனியார் பஸ்சில் தூத்துக்குடிக்கு சென்றனர். அவர்கள் இன்று காலை திண்டுக்கல் அடுத்துள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

அதற்கு எங்கள் கட்சி கொடியை பார்த்ததும் கட்டணம் கேட்பீர்களா என அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். கட்டணம் செலுத்தாமல் செல்ல முடியாது எனக்கூறி அவர்கள் வந்த வாகனத்தை நிறுத்தினர். இதனால் அக்கட்சி நிர்வாகிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் பணிக்கு செல்லும் ஊழியர்களும், மற்ற வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின.

Tags:    

Similar News