null
வெப்ப அலையால் புதிய உச்சம் : தமிழகத்தின் மின் தேவை 20,830 மெகாவாட்
- கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது
- பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது
கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாதம் முழுவதும் வெயில் உக்கிரமாக இருந்தது. இதனால், மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
பல உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. இயல்பை விட இந்த ஆண்டு மிக அதிகமாக வெப்பம் நிலவியதால் மக்கள் தவித்து வருகிறார்கள். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதால், ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின் தேவை அதிகரிகரித்துள்ளது. இரவு நேரத்தில் மக்கள், 'ஏசி' சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே, மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இந்நிலையில் வெப்ப அலை வீசுவதால் தமிழகத்தின் மின்சார தேவை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்து வருகிறது.
கடந்த 30 - ந்தேதி அதிகபட்ச மின் தேவை 20,701 மெகாவாட் ஆகும். மேலும் தமிழ்நாட்டின் மின் தேவை தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கோடை வெப்ப அலையின் தாக்கத்தால், தமிழ்நாட்டின் மின் தேவை 20,830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் வெப்ப அலை காரணமாக நேற்று 2 -ந்தேதி முதல் மாநிலத்தின் மின் தேவை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.