தமிழ்நாடு

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு குறித்து எந்த தகவலும் தெரியாது- ஆளுநர் மாளிகை

Published On 2024-05-13 10:39 GMT   |   Update On 2024-05-13 10:39 GMT
  • அண்ணாமலை மீதான புகாரின்பேரில் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு அரசு அனுமதி.
  • வழக்கு தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என சமூக ஆர்வலர் புகாரின்பேரில் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்த எந்த தகவலும் தெரியாது என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை.

மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது. என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News