தமிழ்நாடு
அக்டோபர் 15ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை
- கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.
- அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பருவமழை தொடங்க காரணமாக அமைய உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், இந்தாண்டு முன்கூட்டியே தொடங்குகிறது.
இதன் எதிரொலியால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.
அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளனர்.