தமிழ்நாடு
- பாராளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசிக்கிறார்.
- தேர்தல் நடத்தும் மாதம் மற்றும் தேதிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக வரும் 8-ந்தேதி சென்னையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசிக்கிறார். ஆலோசனையில் தேர்தல் ஆணையர்கள் அனுப்சந்திர பாண்டே, அருண் கோயல் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் நடத்தும் மாதம் மற்றும் தேதிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளன.
இந்த ஆலோசனையில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். தேர்தல் பணிகள், பாதுகாப்பு தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற உள்ளது.